திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியான அமலி நகர் இன்று மீனவ மக்கள் வாழுகின்ற பகுதியாகும். பைபர் படகுமூலம் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடல் அரிப்பால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர் தமிழக அரசுக்கு எங்களுக்கு தூண்டில் பாலம் வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்
அதன் அடிப்படையில் 58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அமல நகர் கடற்கரைப் பகுதியில் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது ஆனால் இது முற்றிலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மோசடி நடைபெற்று இருப்பதாகவும் மீண்டும் மக்கள் கூறுகின்றனர் 65 மீட்டர் தூரம் கடற்கரை பகுதி அழிந்து உள்ளது
தூண்டில் பாலம் அமைத்ததிலும் சரியான முறையில் அமைக்காததால் தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டு வருகிறது இதனால் மீனவர்கள் பைபர் படகுமூலம் கடற்கரையில் இருந்து கடலுக்கு படகை இறக்கும் பொழுதும் கடலில் இருந்து கரை பகுதிக்கு படகை ஏற்றும் போதும் மிகவும் சிரமப்படுகின்றனர்
கடற்கரை பகுதியில் படகுகளை நிறுத்தும் அளவிற்கு மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் நிறுத்திவைக்க பட்டுள்ள படகுகள் அந்தரத்தில் தொங்கும் அவல நிலைமையில் உள்ளது திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அணிதாராதாகிருஷ்ணன் எங்களுடைய கோரிக்கையை காது கொடுத்து கேட்பது கிடையாது என்று மீனும் மக்கள் கடும் அதிரத்தில் உள்ளனர் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சியும் அமைச்சர் மீதும் தமிழக அரசு மீதும் கடும் குற்றச்சாட்டு சுமத்துகிறது நேரில் சென்று பார்த்த போது அங்கு அமைக்கப்பட்டுள்ள தூண்டில் பாலத்தில் பல முறைகேடுகள் சரியான முறையில் அமைக்கப்படவில்லை என்று தெரிய வருகிறது 58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது
20 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகின்றனர் இதே நிலைமை நீடித்தால் வரும் காலங்களில் கடற்கரை பகுதி முற்றிலும் சிதைந்து நாங்கள் மீன்பிடிக்க முடியாத நிலைமைக்கு தள்ளப்படும் சூழ்நிலை உள்ளது என்று மீனவ மக்கள் வெளிப்படையாகவே குற்றம் சாட்டுகின்றனர்
வரும் தேர்தலில் கடற்கரை அரிப்பை சரி செய்ய விட்டால் திமுக அரசுக்கு எதிராக வாக்களிக்கும் சூழ்நிலை உருவாகும் என்றும் மீனவ மக்கள் தெரிவிக்கின்றனர் மீனவ மக்கள் உடனடியாக தமிழக அரசு கடற்கரை அரிப்பை உடனடியாக சரி செய்ய வேண்டும் தூண்டில் பாலம் பகுதியை நீடித்து தர வேண்டும் என்று மீனா மக்கள் கோரிக்கை வைக்கின்றனர் விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர்டினலட்டா கூறுகையில் கல்லாமொழி அனல் மின் நிலையத்துக்கு கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலதால்தான் அமலை நகர் மணப்பாடு குலசேகரப்பட்டினம் பெரியதாழை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் அரிப்பு ஏற்படுகிறது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத அளவில் உடனடியாக தமிழக அரசு கடல் அரிப்பிலிருந்து மீனவர்களை பாதுகாக்க வேண்டும் தவறும் பட்சத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார்
மொத்தத்தில் அமல் நகர் மீனவ கிராமம் வரும் காலங்களில் கடல் அரிப்பு தடுக்கப்பட வேண்டும் தூண்டில் பாலத்தை நீடித்துக் கொடுக்க வேண்டும் இதனை செய்யவில்லை என்றால் அமலி நகர் கடற்கரையில் மீனவர்கள் படகுகளையும் கடற்கரைப் பகுதியில் நிறுத்த முடியாது மீன்பிடி தொழிலை இழந்து எங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் என்று மீனம் மக்கள் மனக்கும் வரலை கொட்டுகின்றன மீனா மக்களின் குரலுக்கு திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் காது கொடுத்து கேட்பாரா அல்லது செவிடன் காதில் ஊதிய சங்காக இருப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மீன்வளத்துறை அமைச்சராக தான் இருக்கிறார் அப்படி இருந்தும் அனிதா கிருஷ்ணன் எஏன் மீனவ மக்களின் குறைகளை கண்டு கொள்ளாமல் இருக்கிறார் என்று தெரியாமல் உள்ளது