நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற காரையாரில் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளது இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்
ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்ற நிலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .
முண்டந்துறை வனசரக அலுவலகத்தில் பின்புறத்தில் உள்ள அடர் வனப்பகுதியில் பழைய பட்டவராயன் கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலிலும் பக்தர்கள் கிடா வெட்டி பொங்கலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர் இந்த பட்டவராயன் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தாமிரபரணி ஆற்றைக் கடந்து செல்லும் நிலை உள்ளது.
ஆற்றை கடந்து செல்வதற்கு எந்த ஒரு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் அந்த பகுதியில் மேற்கொள்ளப்படவில்லை கோவிலில் கொடை விழா முடிந்து பக்தர்கள் வெளியேற முயன்ற போது தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பக்தர்கள் வனத்துறை சார்பில் கட்டப்பட்ட கயிறு பிடித்துக் கொண்டும், பெண்கள் தங்கள் குழந்தைகளை பாத்திரங்களில் வைத்து பாதுகாப்பாக வெளியேறினர் இந்த பகுதியில் பாதுகாப்பு வசதிகள் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.