செங்குன்றம் செய்தியாளர்
புழல் கேம்ப் சாலை சந்திப்பு அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருவள்ளூர் மத்திய மாவட்டம் மாதவரம் மத்திய பகுதி சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழத்தின் சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு செயல் வீராங்கனைகள் மற்றும் செயல் வீரர்கள் கூட்டம் மத்திய பகுதி கழக செயலாளர் ரோலக்ஸ் ரவிக்குமார் தலைமையில் நடைபெற்றது .
இதில் திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.வேதாச்சலம் முன்னிலை வகித்தார் இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் அ.ம. மு.க. துணைப் பொதுச் செயலாளர் மண்டல பொறுப்பாளர் தென் சென்னை மாவட்ட கழக செயலாளருமான செந்தமிழன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செயல்வீரர்கள் கூட்டத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை குறித்து ஆலோசனை கருத்துகளை எடுத்துரைத்தார் இதில் கழக மற்றும் மாநில சார்பு மாவட்ட கழக பகுதி கழக நிர்வாகிகள் மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .