செங்குற்றம் செய்தியாளர்
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் 3 க்குட்பட்ட 25, 26 வது வார்டு அலெக்ஸ் நகர் , ஏ பி சி டி காலனி, வேதா நகர், காமராஜ் நகர், லிட்டில் வின்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு உட்பட்ட 20 நகர்களை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் ஏராளமான குடும்பங்கள் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் சுமார் 50 வருடங்களுக்கு மேலாக வசித்து வருகின்றார்கள்
இந்தப் பகுதியில் தமிழ்நாடு அரசு ஆவின் நிர்வாகத்தால் பால் உற்பத்தி ஆலை மற்றும் அதன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைய இருப்பதை கண்டித்து அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து சுத்திகரிப்பு நிலையத்தையும் கழிவுநீர் செல்லும் பாதையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என அலெக்ஸ் நகரில் உள்ள ஒரு வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடத்தி அரசை மாற்று இடம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தற்போது ஆவின் பால் பண்ணை அடுத்த இந்த நகரில் 1958 மெயின் கேட் டைரி வாக்கில் மக்கள் வாழ முடியாத ஒதுக்கு புறமான பகுதி ஆதலால் பெருவாரியான நிலம் ஒதுக்கி ஆரம்பிக்கப்பட்ட இவ்விடத்தில் தற்போது அதன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அதன் கழிவுகள் தற்போது மழைநீர் கால்வாயில் விடப்படுகிறது
மேலும் மெயின் கேட்டில் இருந்து மாத்தூர் வரை 100 ஏக்கர் ஆவின் நிலம் உள்ளது அதை பயன்படுத்தாமல் அடர்த்தியாக மக்கள் வசிக்கும் இந்த பகுதியை தேர்ந்தெடுப்பது மக்களை புறக்கணிக்கும் செயலாகும். இந்த செயல் தொடர்ந்தால் காற்று மாசுபடும், துர்நாற்றம் வீசும் நீர்ஆதார முற்றிலும் பாதிக்கப்படும் , நிலத்தடி நீர் பாதிக்கப்படும் , மெட்ரோ ரயில் கட்டமைப்பால் நிலத்தடி நீர் சுரப்பது நின்று போகும் படிப் படியாக இந்தப் பகுதி மக்கள் வாழ தகுதியற்றதாக மாறும் எனவும் மேலும் தொழிற்சாலையில் சத்தமும் ,அதிக கனரக வாகனங்களின் சத்தமும் இந்த பகுதியை அமைதியற்றதாக்கி ஆரோக்கியமாக வாழ கெடும் என குடியிருப்பு நகர் வாசிகள் தெரிவித்தனர்.
எனவே அரசு இதனை உணர்ந்து இந்த பகுதிவாழ் மக்களுக்கு உறுதுணையாய் இருந்து தொழிற்பேட்டை அல்லாத குடியிருப்பு பகுதியில் அமை இருக்கும் என்ற அபாயத் திட்டத்தை வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென நகர் வாசிகள் தெரிவித்தனர். இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள் , வழக்கறிஞர்கள் , பொதுமக்கள் வியாபாரிகள் குடியிருப்பு சங்கங்களை சார்ந்த அனைவரும் கலந்து கொண்டனர்.