செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள பள்ளிப்பேட்டை
ஊராட்சியில் ஆடி மாதம் முன்னிட்டு முனீஸ்வரன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பள்ளிப்பேட்டை ஊராட்சியில் 30 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த முனீஸ்வரன்
ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் வருடத்துக்கு ஒரு முறை ஆடி மாதம் அன்று
சிறப்பு அபிஷேக அலங்காரம் ஆராதனைகள் நடைபெறும்.அதனை தொடர்ந்து நேற்று காலை 12 மணி அளவில் முனீஸ்வரன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அடியார் ஏழுமலை தீபாராதனை காண்பித்தார்.இதில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.