தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூா், ஜூலை- 28. தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு,
மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான அவதூறு வழக்கை நிபந்தனை இன்றி உடனே திரும்ப பெற வலியுறுத்தி நீதிமன்றங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவுறுத்தியதை தொடர்ந்து, தஞ்சாவூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.திராவிடச்செல்வன் தலைமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு செயலாளர் பி.அருண்குமார், பொருளாளர் மணிவாசகம் , முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் கோ. அன்பரசன், குமரவேல், முன்னாள் செயலாளர்கள் சுந்தர்ராஜன், கீர்த்திராஜ், மூத்த வழக்கறிஞர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான அவதூறு வழக்கை உடனே திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.