திருவண்ணாமலை மாவட்ட தெற்கு மாவட்ட சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மற்றும் விழுப்புரம் மாவட்ட சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களுடைய பதினோராம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் சிறுதலைப்பூண்டி முருகன் நந்தல் பள்ளி குழந்தைகளுக்கு சட்ட உரிமை கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் ஏ சுரேஷ் குமார் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கல்வி உபகரணங்கள் பள்ளி குழந்தைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சட்ட உரிமைகள் கழகம் இன்டர்நேஷனல் அமைப்பின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் சரவணன் அவர்களும் விழுப்புரம் மாவட்ட தலைவர் அவர்களும் சிறப்பாக செய்திருந்தார்கள்