கே வி முகமது அரியலூர் மாவட்ட செய்தியாளர்:
அரியலூர் கிங்ஸ் லயன் சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா சிறப்பாக நடந்தது அரியலூர் அஞ்சப்பர் ஹோட்டலில் நடந்த விழாவிற்கு மகாராஜன் தலைமை தாங்கினார் சாசன தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார்
குழந்தைவேல் அனைவரையும் வரவேற்று பேசினார் கீழ்க்கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்று கொண்டனர் தலைவர் சௌந்தர்ராஜன் செயலாளர்கள் ராமலிங்கம் கார்த்திகேயன் பொருளாளர் முத்துகிருஷ்ணன் நிர்வாக அலுவலர் மதியழகன் உடனடி முன்னாள் தலைவர் மகாராஜன் துணைத் தலைவர் சன் சுரேஷ் உறுப்பினர் வளர்ச்சித் தலைவர் குழந்தைவேல் மக்கள் தொடர்ப அலுவலர் சின்னதுரை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் திட்டத்தின் தலைவர் மோகன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்
புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி முன்னாள் மாவட்ட ஆளுநர் பிரேம் சிறப்புரையாற்றினார் நிகழ்ச்சிகளை வைஜெயந்தி தொகுத்து வழங்கினார் தலைவர் சௌந்தர்ராஜன் ஏற்புரையாற்றினார்
இந்த ஆண்டில் அதிக அளவில் இலவச மருத்துவ முகாம் பொது சேவைகள் அதிகம் செய்யப்படும் என்று தலைவர் சௌந்தரராஜன் தான் பேசும் போது கூறினார் ராமலிங்கம் அனைவருக்கும் நன்றி கூறினார் சங்கத்தின் புதிய உறுப்பினர்களாக சின்னதுரை செந்தில்குமார் பொறுப்பேற்றுக் கொண்டனர்
சிறப்பு அழைப்பாளர்களாக வள்ளலார் கல்வி நிலைய நிர்வாகி அய்யா கொ வி புகழேந்தி ராயல் சென்டினல் சாசன தலைவர் வாரணவாசி ராஜேந்திரன் அரியலூர் மாவட்ட திருக்குறள் கூட்டமைப்பு தலைவர் பொறியாளர் நாகமுத்து உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.