கோவையில் சாலை பாதுகாப்பு குறித்து ட்ரினிட்டி பள்ளி மாணவர்கள் தத்ரூபாமக நடனத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளை வியப்படைய செய்தனர்.
சாலை விபத்துக்களை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் அமைப்பின் மூலம் தொடரச்சியாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ட்ரினிட்டி மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் வாகன ஓட்டிகள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து பள்ளி மாணவர்கள் தத்ரூபாமக நடனமாடியும்,எதனால் விபத்து ஏற்படுகிறது என்பதையும் ஒத்திகை நடத்தி அசத்தினர்.முக்கியமாக செல்போன் பேசிக்கொண்டும், மதுபோதையிலும் வாகனத்தை இயக்க கூடாது,போக்குவரத்து விதியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை மாணவர்கள் வலியுறுத்தினர். இந்த விழிப்புணர்வின் போது போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சிவசக்தி மற்றும் பள்ளியின் தாளாளர் மார்ட்டின், முதல்வர் தனலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.