திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நேற்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்று, தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் வீடு ஒதுக்கீடு, தொடர்பான மனுக்கள் கலைஞர் மகளிர் உதவித்தொகை வேண்டி மனுக்கள், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, என மொத்தம் 508 மனுக்கள் பெறப்பட்டதாக திருச்சி மாவட்ட ஆட்சியரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்ணை
க. மாரிமுத்து.