வாடிப்பட்டி.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி சார்பில் வார்டு 1 முதல் 9 வரை உள்ள வார்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தனியார் மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை வெங்கடேசன் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மணிகண்டன் வாடிப்பட்டி வட்டாட்சியர் ராமச்சந்திரன், பார்த்திபன், பேரூராட்சி தலைவர் பால்பாண்டியன்,
திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் பாலராஜேந்திரன், துணைத் தலைவர் வக்கீல்கார்த்திக், முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி பால்பாண்டியன், முன்னாள் பேரூர் செயலாளர் பிரகாஷ், இளைஞரணி வெற்றிச்செல்வன், செயல் அலுவலர் ஜெயலட்சுமி, இளைஞரணி வினோத், தகவல் தொழில்நுட்ப அணி அரவிந்தன் இளநிலை உதவியாளர்கள் தனலட்சுமி, மாயாண்டி, முத்துக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்
முகாமில் பிற்பட்டோர் நலத்துறை ஆதிதிராவிடர் நலத்துறை மாற்றுத்திறனாளிகளுக்கான துறை சிறப்பு திட்ட செயலாக்கு துறை உள்ளிட்ட பல்வேறுதுறைகளின் சார்பில் மனுக்கள் பெறப்பட்டது மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான மனுக்கள் வழங்க பொதுமக்கள் மற்றும் பெண்கள் ஆர்வம் காட்டினர்.