வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற – பூரணாங்குப்பம் பனை ஆனந்தன்
புதுவை தமிழ்சங்கத்தில் நடைபெற்ற, கவிஞரேறு வாணிதாசன் அவர்களின் 111 வது பிறந்தநாள் விழாவில் (27- 7-2025 ) கவிஞரேறு வணிதாசனார் கலை, இலக்கிய பேரவை சர்பில் , தமிழ்ச் சங்கத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் பூரணாங்குப்பம் பனை ஆனந்தன் – சமூகபணியை பாராட்டி “வாழ்நாள் சாதனையாளர் விருது”வழங்கி பாராட்டினார்கள் விருதை சபாநாயகர் ஏம்பலம் R.செல்வம் அவர்கள் வழங்கினார்கள் நிகழ்வில் தமிழ்மாமணி, புலவர் வேல்முருகன் அவர்கள் தமிழ்சங்க தலைவர் முத்து அவர்கள் தமிழ் பல்கலைக்கழகம்- தஞ்சாவூர் , இலக்கிய துறை தலைவர் இளயாபிள்ளை அவர்கள் மற்றும் செந்தமிழ் செல்வன் பொன்.முருகன் ஆகியோர் பங்கு பெற்றனர்.