திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பொதுமக்களின் பல்வேறு வகையான கோரிக்கை மனுக்கள் மகளிர் உரிமைத்தொகை பட்டா, சிட்டா மற்றும் பெயர் மாற்றம் வாரிசு சான்றிதழ் மற்றும் மருத்துவ காப்பீடு,முதியோர் உதவித்தொகை மற்றும் 14 வகையான மனுக்களை பெற்று உடனுக்குடன் நிவர்த்தி செய்ய அதிகாரிகளுக்கு பரிந்துரைத்தார்.
இந்நிகழ்வில் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கினார்.இந்நிகழ்வில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர்.சக்திவேல் மற்றும் மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கன்னிவாடி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.