புதுச்சேரி மாநில முதல்வர் என். ரங்கசாமி அவர்களுக்கு, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான. இரா. சிவா அவர்கள் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
உடன் மாநில திமுக துணை அமைப்பாளர் திரு. வி. அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பொருளாளர் . இரா. செந்தில் குமார் எம்.எல்.ஏ., திமுக இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால், தொகுதி செயலாளர்கள் இரா. சக்திவேல், சிவகுமார், இந்திரா நகர் பசுபிக் சங்கர், சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் திரு. முகிலன் ஆகியோர் உடனிருந்து வாழ்த்தினர்.