புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் உள்ள முடக்குமுத்து மாரியம்மன் கோவில் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த இரு நாட்களாக 15க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் வீடு திரும்பிய நிலையில் 10பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்
அவர்களை புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிக்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்களும் திமுக மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினரும், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான திரு. எஸ். கோபால் அவர்களும் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.
பின்னர் பொதுப்பணி துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு நிலைமையை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.