போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேசன் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு நிறுவனங்கள் குறித்த மாஸ்டர் கிளாஸ் பயிற்சி என்னும் தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தால் கல்லூரி வளாக கருத்தரங்க கட்டிடத்தில் கல்லூரியின் தலைவர் எஸ் வி சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

கல்லூரியின் செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் உப தலைவர் எஸ் இராமநாதன் கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் முனைவர் பி. சிவப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர் பாப்பு லட்சுமி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காந்திகிராம பல்கலைக்கழக கெளரவ பேராசிரியர் கார்ப்பரேட் ஆலோசகர் ஆனந்த் ராஜேந்திரன் பேசும்போது இன்றைய கார்ப்பரேட் உலகில் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் எவ்வாறு வேலை வாய்ப்பு திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றி மாணவர்களுக்கு புரியுமாறு விரிவாக விளக்கிப் பேசினார்.

கல்லூரி பொறுப்பு முதல்வர் முனைவர் ஞானசேகரன் கல்லூரியின் வேலை வாய்ப்பு பயிற்சி மைய துணை ஒருங்கிணைப்பாளர் அமல பிரியா கலந்து கொண்டு விழாவின் வேலைவாய்ப்பு நோக்கம் குறித்து பேசினார்கள். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் மூன்றாம் ஆண்டு மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு கல்லூரி படிப்புக்கு பின்பு எவ்வாறு வேலைவாய்ப்பு பெறுவது குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டு பயன் அடைந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி கண்காணிப்பாளர் யுவராஜா தலைமையில் கல்லூரி நிர்வாகம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மைய ம் ஐஏஎஸ் பயிற்சி முறை உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர். கல்லூரி வேலைவாய்ப்பு பயிற்சி மைய உறுப்பினர் அபிநயா நன்றி கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *