தூத்துக்குடி செல்வவிநாயகா் திருக்கோவில் 28ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான முக.ஸ்டாலின் ஆட்சியில் இந்துசமய அறநிலைத்துறை அமைச்சர் சேகா்பாபு மேற்பாா்வையில் தமிழக முழுவதும் இந்து சமய அறநிலைத்துறை கட்டுபாட்டில் உள்ள திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் மற்றும் ஓரு கால பூஜை என தமிழகம் முழுவதும் 3500க்கும் மேற்பட்ட திருக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடி தெற்கு சம்பந்த மூர்த்தி தெருவில் உள்ள செல்வவிநாயகா் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது. வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனைக்கு ஏற்ப நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகள் நடைபெறுகிறது.
28ம் தேதி நடைபெறும் கும்பாபிஷே விழாவில் திமுக துணைப்பொதுச்செயலாளரும் தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி அமைச்சர்கள் கீதாஜீவன் சேகா்பாபு மேயர் ஜெகன் பொியசாமி மாநகர செயலாளர்ஆனந்தசேகரன், தொழிலதிபா் ஜீவன்ஜேக்கப், உள்பட மாநகாின் முக்கிய பிரமுகா்கள் ஆன்மீக அன்பா்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனா்.