கும்பகோணம் வள்ளலார் அரிமா சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி மேலக்காவேரி அரசு மகப்பேறு மருத்துவமனையில் இன்று கொண்டாடப்பட்டது
இவ்விழாவில் சங்க தலைவர் லயன் ஆ.ந.சரவணன் தலைமை தாங்கினார்.மருத்துவர் டாக்டர் வீ.அனிதா ,செவிலியர்கள் எம்.தீபா. எஸ்.சோபியா. வீ.வெற்றி செல்வி .கே.லாவண்யா ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். தொடர்ந்து டாக்டர் அனிதா தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்து பேசினார் 20க்கும் மேற்பட்ட தாய்மார்களுக்கு பழங்கள்,ஆடை துண்டு அடங்கிய பிளாஸ்டிக் வாளி வழங்கப்பட்டது.
.
மருத்துவர் மற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இதில்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சி ஏற்பாடுகளை சங்க சாசன தலைவரும் ,வள்ளலார் தின மாவட்ட தலைவர் எம் ஜே எப் லயன் ச.இரவி செய்திருந்தார்.