சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் நடமாடும் கோளரங்கம் விண்வெளி அறிவியல் விரிவாக விளக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளியிலேயே கோளரங்கம் மூலம் வானியல் நிகழ்வுகளை நேரில் பார்த்ததில் மிகுந்த பரவசமடைந்து மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிகழ்வை ஸ்பெஸ் ட்ரிப் நடமாடும் கோளரங்க நடத்துனர் சரவண பாண்டி , தமிழரசி , காளிதாஸ்,லோகநாதன் ஆகியோர் நடத்தினார்கள் . பள்ளி தலைமையாசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்