திண்டுக்கல் நத்தம் சாலை சிறுமலை பிரிவில் உள்ள தனியார் மண்டபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதற்கு புறநகர் துணை கண்காணிப்பாளர்.சங்கர் தலைமை தாங்கினார்.இதில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர்.பாலமுருகன், சார்பு ஆய்வாளர்கள்.அங்கமுத்து, பொன்னுச்சாமி, கோமதி,முனியாண்டி அருண் நாராயணன், அருண் பிரசாத் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் தர்மா,சிவசேனா மாநில தலைவர் சி.கே.பாலாஜி உள்பட பல்வேறு இந்து அமைப்புகளின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.