திருவாரூர் மாவட்டம் குடவாசலில் இருந்து வலங்கைமான் வழியாக பாபநாசம் செல்லும் அரசு பேருந்து காலை 6 மணிக்கு குடவாசலில் இருந்து பாபநாசம் சென்றபோது அகர ஓகை அருகே சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியதில் மின் கம்பம் மூன்று துண்டுகளாக உடைந்து பேருந்தின் மீது விழுந்ததில் பேருந்தின் முன் பகுதி பயங்கரமாக சேதமடைந்துள்ளது. இந்த விபத்தில் ஓட்டுநர் மற்றும் பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.