C K RAJAN Cuddalore District Reporter
9488471235
79 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்..
கடலூர்
வடக்கு மாவட்ட கோண்டூர் கிளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம் மருத்துவர் வினோத் உதவியுடன் மாவட்டத் தலைவர் முகமது யாசின் தலைமையில் நடைபெற்றது.
ரத்ததான முகாமிற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாபெரும் ரத்ததான முகாமினை தொடங்கி வைத்து ரத்ததான கொடை வள்ளல்களை பாராட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பொறுப்பாளர்களை ஊக்குவித்தார்
இந்நிகழ்வில் சுகாதாரத்துறை அலுவலர் கதிரவன், சந்தோஷ் குமார், வடக்கு மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம் முகாமில் 50க்கும் மேற்பட்ட அமைப்பைச்சார்ந்த பொறுப்பாளர்கள் அவரவர் குருதியை தானமாக வழங்கினார்கள்.