எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
முத்தமிழர் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மாபெரும் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை முகாமை சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சிக்கு உட்பட்ட அளக்குடி கிராமத்தில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அளக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாபெரும் புற்றுநோய் சிகிச்சை சிறப்புமுகாம் நடைபெற்றது
இதில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்தர் இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிக்குமார் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயப்பிரகாஷ் சீர்காழி நகர இளைஞரணி அமைப்பாளர் பிரவீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
முகாமில் டாக்டர் விமல் புற்றுநோய் மருத்துவர் மற்றும் டாக்டர் மணிமாறன் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பன்னீர்செல்வம் காது மூக்கு கொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் டாக்டர் யாழினி ஆகியோர் முகாமில் மருத்துவ பரிசோதனை ஈடுபட்டு சிகிச்சை அளித்தனர் ஆச்சாள்புரம் கோதண்டபுரம் அளக்குடி முதலைமேடு உள்ளிட்ட 20கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொது மக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைந்தனர்