கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:
அரியலூரில் விதை திருவிழா சிறப்பாக நடந்தது தமிழ் காடு இயற்கை வேளாண்மை இயக்கம் சார்பில் ஏழாவது ஆண்டு விதை திருவிழாவை அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா துவக்கி வைத்தார்
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த இயற்கை வழி வேளாண்மை கருத்தரங்கம் மரபு விதைகள் மரக்கன்றுகள் மூலிகை கண்காட்சி நடந்தது தமிழ் பண்பாட்டு பேரமைப்பு தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார் விதை திருவிழாவை துவக்கி வைத்து அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் கு சின்னப்பா சிறைப்புரையாற்றினார்
தலைமை ஆசிரியர் கவிதா சோழமாதேவி முனைவர் கோ அழகு கண்ணன் அரியலூர் ஆசிரியர் நல்லப்பன் முனைவர் வை ராதாகிருஷ்ணன் முனைவர் பாக்யராஜ் மல்லூர் சீனிவாசன் காரைப்பாக்கம் சச்சிதானந்தம் பனங்காட்டங்குடி விவசாயி வீராசாமி சங்கீதா கன்டிராதித்தம் நாகராஜன் இளஞ்செழியன் சுமதி பாவலர் சிலம்பு செல்வி ஆகியோர் இயற்கை விதைகள் பற்றி விளக்கி பேசினார்கள் முன்னதாக செங்கொடி அனைவரையும் வரவேற்று பேசினார் தமிழ் களம் இளவரசன் அனைவருக்கும் நன்றி கூறினார்