திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் முதல் கட்டமாக எட்டாவது வார்டு வரை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, நகர செயலாளர் பா. சிவநேசன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் சரவணன், வட்டாட்சியர் ஓம் சிவகுமார், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க.தனித்தமிழ்மாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீ. அன்பரசன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார். முகாமில் மகளிர் உரிமைத் தொகை மற்றும் இதர கோரிக்கைகள் தொடர்பாக சுமார் 489 மனுக்கள் வந்தன. அதையடுத்து திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே. கலைவாணன், வலங்கைமான் பேரூராட்சி மன்ற பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டார்.
அதனைத் தொடர்ந்து மகளிர் குழு உறுப்பினர்களுக்கு வங்கி காசோலை வழங்கினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள் உள்பட அனைத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.