செங்கல்பட்டு மாவட்டம் தமிழக வெற்றி கழகம் அச்சிறுப்பாக்கம் தெற்கு
ஒன்றியம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகம் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் சார்பில் இரண்டாவது மாநில மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனைக் கூட்டம்
கடமலைப்புத்தூர் சண்முக செட்டியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆசியுடன் பொதுச்செயலாளர்
புஸ்சி ஆனந்து அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு மாவட்ட காவலர் மோகன்ராஜா வழியில் மாவட்ட நிர்வாகி ஜான் ராஜேஷ் மற்றும் சபரி வழியில்
ஒன்றிய செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பேசுகையில் நடைபெற உள்ள இரண்டாவது மாநாடு குறித்து ஒன்றியம் சார்பில் அதிகப்படியான வாகனங்களில் நிர்வாகிகள்
கலந்து கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் ஒட்டும் ஸ்டிக்கர் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய தலைவர் இளங்கோவன் வேலன் மணிகண்டன் தர்மதேவ் பச்சையம்மாள் செந்தமிழ் அரசு ஜெயராமன் வெங்கடேசன் எழில் பாண்டியராஜ் தினேஷ் கலைமணி கார்த்திக்
சசிகுமார் அன்பரசு வசந்த் பவித்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.