தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருத்தேர் திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில் மற்றும் மிகவும் சக்தி வாய்ந்த மாரியம்மன் என்றும் வரலாறு கூறுகிறது.
இந்த திருத்தேர் திருவிழாவில் சேலம் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டத்தை சார்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.இந்த திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக மாபெரும் அன்னதான விழா நடைபெற்றது.
இதில் பல ஆயிரக்கணக்கான (இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட) பக்தர்கள் வரிசையில் வந்து அன்னம் பெற்று சென்றனர்.இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அகில பாரதீய சந்நியாசிகள் சங்கத்தின் நிறுவனர் வாழும் கலியுக சித்தர் தவத்திரு.சுவாமி இராமானந்தா மற்றும் சொர்க்கபுரம் ஆதீனம் 22-வது குருமஹா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ தண்டாயுதபாணி தேசிகர் , கோட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் , செவ்வாய் பேட்டை மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதான விழாவை தொடங்கி வைத்தனர்.
சங்கத்தின் தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனை படி இந்த மாபெரும் அன்னதான விழா ஏற்பாடுகளை சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் சர்மிளா சரவணன், ரவிச்சந்திரன் ஜி , வழக்கறிஞர் சுதன்,பிரபு, ஶ்ரீதர் , கீர்த்தி ஜெயகாந்த்,கவிதா,காயத்ரி, சக்தி , மதியழகன்,மஹா விஷ்ணு,நேதாஜி,சுந்தரம்,கதிர்,சசிகலா,புவனேஸ்வரி,நித்தின்,சாய்,சத்யா,பாலாஜி,ராஜி,லதா,ஸ்ரீசனா,மைனாவதி, அருண் பிரசாத் , அருண் ,ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் சிறப்பாக செய்திருந்தனர்.