திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் வருடந்தோறும் ஆடி மாதம் இலட்சார்ச்சனை மற்றும் திருவிளக்கு பூஜையும் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல் இந்தாண்டும் கடந்த 08- ந்தேதி வெள்ளிக்கிழமை, 09- ந்தேதி சனிக்கிழமை, 10- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் இலட்சார்ச்சனை விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இலட்சார்ச்சனை விழா பூஜைகளை திப்பிராஜபுரம் சிவஸ்ரீ, டாக்டர் ஜெ. வெங்கடேச சிவாச்சாரியார் (சுரேஷ்) குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
வருகின்ற 15- ந்தேதி ஆடி கடை வெள்ளிக்கிழமை அன்று மாலை 6- மணிக்கு சுமங்கலிகள் கலந்து கொள்ளும் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது, திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள விரும்புவோர் முன்கூட்டியே ரூ.300 (முன்னூறு மட்டும்) ஆலயத்தில் உள்ள சீட்டு விற்பனை நிலையத்தில் கணினி ரசீது பெற்று கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
விழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், ஆய்வர்/ தக்கார் க.மும்மூர்த்தி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.