கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:
அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு ஆரம்பம்
அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது இந்த வகுப்பை நடத்துவதற்கு அரியலூர் தமிழ் பண்பாட்டு பேரமைப்புக்கு அரசு அனுமதி வழங்கியது
இதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை மு கவிதா தலைமை தாங்கினார் பள்ளியின் முதுகலை தமிழ் ஆசிரியர் ராமகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று பேசினார்
தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் பொருளாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார் முனைவர் பேராசிரியர் சிற்றரசு தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் அமைப்புச் செயலாளர் ஆசிரியர் அரியலூர் நல்லப்பன் ஒருங்கிணைப்பாளர் தமிழ் களம் இளவரசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்
இந்த பயிற்சி வகுப்பை நடத்த உள்ள ஆசிரியர் அரங்கநாடன் வகுப்பை நடத்தினார் மங்கையர்கரசி நன்றி கூறினார் வாரத்தில் ஒரு நாள் மட்டும் நடைபெறும் இந்த வகுப்பில் 25 மாணவர்கள் பயிற்சி பெறுவார்கள் விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்