கே வி முகமது அரியலூர் செய்தியாளர்:
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரத்த தான முகாம்
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரியலூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி குருதி மையம் இணைந்து மாபெரும் ரத்த தான முகாம்
அரியலூர் ஏ ஒய் எம் திருமண மஹாலில் நடந்தது ஜமாத்தின் மாவட்ட தலைவர் சபியுல்லா முன்னிலை வகித்தார் மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹிமான் அனைவரையும் வரவேற்று பேசினார் மாவட்ட பொருளாளர் சையத் ரசீத் மாவட்ட துணைத்தலைவர் சம்சுதீன் மாவட்ட துணைச் செயலாளர் காதர்பாட்ஷா மாவட்ட துணைச் செயலாளர் பஷீர்பாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
அரியலூர் ஜெயங்கொண்டம் அம்பலவர்கட்டளை செந்துறை திருமானூர் ஆகிய பகுதிகளில் உள்ள கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் அமைப்பின் முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு முகாமில் ரத்த தானம் செய்தனர் முஜிபுர் ரஹிமான் அனைவருக்கும் நன்றி கூறினார் குருதி கொடையாளர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது