அருந்ததியர் சமூக பொது நல அறக்கட்டளை சார்பாக பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா கோவை பேரூரில் உள்ள அருந்ததியர் சமூக அரங்கில் நடைபெற்றது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இன ஆணையத்தின் உறுப்பினர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இதில், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரும் ஆன ஈஸ்வரன், தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு,பொது தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மற்றும் உயர் கல்வி முடித்து
அரசு வேலையில் பணி செய்து வரும்பவர்கள்,மருத்துவ படிப்பை படித்து வரும் ,அருந்ததியினர் சமூகத்தினரை பாராட்டி ஊக்க பரிசுகளை வழங்கினர்..
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன், அருந்ததியர் மக்கள் அடுத்த தலைமுறையில் முன்னேறுவதற்கு கல்விதான் முக்கியம் என்பதை எடுத்து கூறும் விதமாக கல்வியில் சாதித்து வரும் மாணவர்களை உள்ளபடியே தாம் பாராட்டுவதாக தெரிவித்தார்..
தொடர்ந்து பேசிய அவர்,அருந்த்தியினர் சமூக மக்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 3 சதவீதம் உள் ஒதுக்கீடு கொண்டு வந்துள்ளது உள்ளபடியே மிகவும் பாராட்டுக்குரியது என கூறிய அவர், ஆனால் அருந்ததி இன சமுதாய மக்கள் தொகைக்கு அந்த மூன்று சதவீதம் உள் ஒதுக்கீடு போதாது, அது ஆறு சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும் என கோரிக்கையை இன்றைய முதல்வர் ஸ்டாலினிடம் அனைவரின் சார்பாக கேட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்..
பொதுவாக கொங்கு மண்டலத்தில் அருந்ததியர் சமுதாய மக்கள் பெருவாரியாக இருக்கின்றனர், தலைமுறை தலைமுறையாக கொங்கு மண்டல வளர்ச்சிக்கு உழைத்துக் கொண்டிருக்கின்றனர் அப்படிப்பட்ட மக்களை உயர்த்துவதற்கு இந்த ஆறு சதவீத உள் ஒதுக்கீட்டை கொடுத்து உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைப்பதாக அவர் கூறினார்..,
ஆணவ படுகொலை பற்றிய கேள்விக்கு அதைப்பற்றி முதல்வர் அவர்களுக்கு நன்றாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும் அதை சிறப்பாக செய்வார் என நாங்கள் நம்புகிறோம் என்றார்..