அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் போதை தடுப்பு குழு சார்பாக போதைப் பொருளுக்கு எதிரான மாபெரும் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் மங்கையர்க்கரசி அவர்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக அரூர் கோட்டாட்சியர், அரூர் காவல்துறை கண்காணிப்பாளர் திரு. கரிகால் பாரி சங்கர், மற்றும் ஆரூர் வட்டாட்சியர் திரு. பெருமாள் அவர்கள் பங்கேற்றனர். நிகழ்வின் முதற்கட்டமாக அரூர் கோட்டாட்சியர் அவர்கள் உறுதி மொழி வாசிக்க மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் அரூர் காவல் துணை கண்காணிப்பாளர் அவர்கள் மாணவர்களிடையே போதைப் பழக்கத்தினால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதைப் பொருட்களுக்கு இளைய சமுதாயம் போதைக்கு அடிமையாகாமல் இருக்க வழிமுறைகளை எடுத்துரைத்தார்.
மேலும் காவல்துறை மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்து வழி நடத்தும் என்றும் உறுதியளித்தார். பின்னர் அரூர் வட்டாட்சியர் அவர்கள் மாணவர்களிடையே போதை பழக்கம் என்பது ஒரு கொடியை விலங்கு என்பதை எடுத்துரைத்தார்.
மேலும் மாலை 2:30 மணி அளவில் அரூர் காவல் உதவியாளர் உதயகுமார் மாணவர்கள் நடத்திய போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணிக்கு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரியின் அனைத்து மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர் இந்நிகழ்வை கல்லூரியின் நாட்டு நல பணி திட்ட அலுவலர் முனைவர் கோபிநாத் மற்றும் போதை தடுப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர் குமார் அவர்கள் ஒருங்கிணைத்தனர்.