தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் முன்னிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
ஆசிரியை முத்துலெட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை காவல் சார்பு ஆய்வாளர் ஜெகதீசன் முன்னிலை வகித்தார். தேவகோட்டை நகர் காவல் ஆய்வாளர் பெரியார் முன்னிலையில் மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை கூறும்போது,
போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து, அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து, அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.
போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன். என்று அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
நிகழ்வில் காவலர் பரஞ்சோதி உட்பட ஏராளமான பெற்றோர்கள் பங்கேற்றனர்.நிறைவாக ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.