திருவொற்றியூர்
திருவொற்றியூர் போலீசார் முக்கிய குற்றவாளியான புதுப்பேட்டையைச் சேர்ந்த ரமேஷ் என்கின்ற மாட்டு ரமேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது சம்பந்தமான வழக்கு திருவொற்றியூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் , ஜாமினில் வெளியில் வந்த ரமேஷ் அதன் பின்னர் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இவரை போலீசார் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் இவரை தேடப்பட்டு வரும் குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதன்படி திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஜினிஷ் தலைமையில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் ரமேஷை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடினர்.
அப்போது புதுப்பேட்டையில் உள்ள மது கடையில் மது அருந்துவதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலை அடுத்து தனிப்படையை போலீசார் அங்கு சென்று ரமேசை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர் படித்து புழல் சிறையில் அடைத்தனர்.