அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் மாவட்டம் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11 பேர் கைது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அரியலூரில் இருந்து சென்னை செல்ல இருந்த நிர்வாகிகள் 11 உறுப்பினர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு திங்கட்கிழமை முதல் போலீசார் பாதுகாப்பில் வைத்துள்ளனர்
சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பனிக்காலமாக அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் அரசாங்கம் அமல்படுத்தாத நிலையை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற இருந்த உண்ணாவிரதத்திற்கு அரியலூரில் இருந்து புறப்பட்டு சென்றவர்களை பஸ் நிலையத்தில் போலீசார் கைது செய்தனர்
சங்கத்தின் மாவட்ட செயலாளர் அம்பேத்கார் மாவட்ட பொருளாளர் மூர்த்தி மாநில செயற்குழு உறுப்பினர் சண்முகமூர்த்தி மாவட்ட துணை தலைவர் ஆசை தம்பி வட்ட செயலாளர்கள் அழகிரி வட்ட பொருளாளர் மகாராஜன் வட்ட துணைத்தலைவர் செந்தில் மற்றும் வேல்முருகன் ராமன் செல்வராஜ் சேகர் ஆகிய 11 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்