இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள வெண்ணீர் வாய்க்கால் கிராமத்தில் தமிழ்நாட்டில் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ரேசன் பொருட்களை வழங்கும், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை வனத்துறை மற்றும் கதர் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், குத்துவிளக்கு ஏற்றி முதல் முதியோர்களுக்கான வீடு தேடி ரேஷன் பொருள் வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் மக்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அடுத்த மாதம் சரியாகிவிடும், காவேரி கூட்டு குடிநீர் திட்டம் இந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்படும், அதற்குண்டான வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளது என்று பேசினார்,
அதனைத் தொடர்ந்து முதுகுளத்தூர் பேரூராட்சியில் உள்ள யாதவர் திருமண மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார், இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜித் சிங் காலோன் மற்றும் திருவாடனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கரு, மாணிக்கம் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.