கம்பம் நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் ஆணையாளரை முற்றுகையிட்டு திமுக கவுன்சிலர்கள் தர்ணா கதறி அழுத பெண் கவுன்சிலர் தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி நகர் மன்ற கூட்டத்தில் வழங்கிய கடிதம் வாங்க மறுத்த நகராட்சி ஆணையர் உமாசங்கரை திமுக கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்
நகர்மன்ற பெண் கவுன்சிலர் அபிராமி தன்னை அவுதூறாக பேசுவதாக கூறி கதறி அழுதார் கம்பம் நகராட்சி நகர் மன்ற மாதாந்திர சாதாரண கூட்டம் அதன் தலைவர் வனிதா நெப்போலியன் திமுக தலைமையிலும் நகராட்சி ஆணையாளர் உமாசங்கர் துணைத் தலைவர் சுனோதி செல்வக்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது
நகர் மன்ற கூட்டம் தொடங்கியதும் அதிமுக கவுன்சிலர் முருகன் ஆணையாளரிடம் கடிதம் வழங்கினார் கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போது கடிதம் வாங்க கூடாது என்று நகர மன்ற தலைவர் ஆணையாளரிடம் கூறினார் உடனே நகர் மன்ற கூட்டத்தில் இருந்த நகராட்சி பணியாளர்கள் மூலம் கடிதம் கவுன்சிலரிடம் திருப்பி வழங்கப்பட்டது
இதனால் ஆத்திரம் அடைந்த திமுக கவுன்சிலர்கள் குறுக்குமரன் இளம்பரிதி பார்த்திபன் சம்பத் பார்சி உள்பட 24 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு கொடுத்த கடிதத்தை ஆணையாளர் வாங்க மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினர் இதற்கு பதில் அளித்த தலைவர் கூட்டம் நடப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன் கொடுத்தால் பெற்றுக் கொள்வோம்
கூட்டத்தில் வழங்குவதை ஏற்றுக்கொள்ள சட்டத்தில் இடம் இல்லை என்றால் இளம்பரிதி பார்த்திபன் குருகுமரன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் செய்யும் பணிகள் தரமாக இல்லை ரூபாய் 8 கோடி மதிப்பில் கட்டிய வாரச் சந்தையை ஹலோ பிளாக்கில் கட்டியுள்ளனர். அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றனர்
அபிராமி திமுக கவுன்சிலர் பேசும் போது நகராட்சி பார்க்கில் கட்டியுள்ள ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கடைகளுக்கு ரூபாய் 10 லட்சம் டெபாசிட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இந்த கூடுதல் டெபாசிட் தொகையை நிர்ணயம் செய்தது யார் ஏன் கவுன்சிலர்களிடம் கேட்கவில்லை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு களங்கும் விளைவிக்க பார்க்கிறீர்கள் முருகன் அண்ணா திமுக கவுன்சிலர் பேசும்போது வாரச் சந்தை கடைகளுக்கு டெபாசிட் ரூபாய் 2 லட்சம் என்று இருக்கும் போது இந்த கடைகளுக்கு ஏன் 10 லட்சம் நிர்ணயம செய்து உள்ளீர்கள் இதனிடையே திமுக கவுன்சிலர்கள் ஆணையாளர் இடத்திற்கு சென்று கடிதம் கொடுத்தனர்
அவர் வாங்க மறுத்து என் அறையில் வந்து தாருங்கள் இங்கு வாங்க கூடாது என்றார். அபிராமி நகர்மன்ற அஜெண்டா தரும்போது சட்ட விதிகளை பார்க்காத ஆணையாளர் எங்கள் கடிதத்தை மட்டும் சட்ட விதிகளை காட்டி வாங்க மறுப்பது ஏன் தலைவர் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த திமுக கவுன்சிலர்களே காரணமாக உள்ளனர் எனக் கூறி சென்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கவுன்சிலர்கள் நகராட்சி பணியாளர்கள் வைத்திருந்த மினிட் வருகை பதி வேட்டை தருமாறு கேட்டனர். அவர் தர மறுத்து எடுத்துச் சென்றார் பின்னர் கூட்ட அரங்கில் கவுன்சிலர்கள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்
அபிராமி திமுக என்னைப் பற்றி தலைவரின் தரப்பில் மிக இழிவாக பேசுகின்றனர் எனக் கூறி கதறி அழுதார் இதை யடுத்து பிற கவுன்சிலர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர் குரு குமரன் திமுக நகராட்சிக்கு வெளியே ஆட்கள் எங்களை தாக்க நிற்கின்றனர் நகர் மன்றத் தலைவரின் கணவர் அநாகரிகமாக நாகரீகமற்ற முறையில் பேசுகிறார் என்றார் இதன் பின் ஆணையாளர் அறைக்கு சென்ற திமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் முதல் மூன்று தீர்மானங்களை தவிர மற்ற அனைத்து தீர்மானங்களை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து கடிதம் வழங்கினார்
அண்ணா திமுக கவுன்சிலர்கள் 6 பேர்களும் அஜெண்டா வில் 2 ஆவது தீர்மானத்தை தவிர பிற தீர்மானங்களை நிறைவேற்ற ஆதரவு இல்லை என்று ஆணையரிடம் கடிதம் கொடுத்தனர் மீண்டும் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திமுக கவுன்சிலர்கள் தர்ணா செய்தனர். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கடைகளுக்கு டெபாசிட் தொகையை குறைக்கவில்லை என்றால் அனைவரும் ராஜினாமா செய்வோம் என்று அதிமுக கவுன்சிலர்கள் கூறினார்கள்