திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே உள்ள அங்காடியில் இருந்து அரிசி, சர்க்கரை உள்ளிட்ட குடிமைப் பொருட்களை முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து வலங்கைமான் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.அன்பரசன், கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நரசிங்க மங்கலம் கோ. தெட்சிணாமூர்த்தி, பேரூர் திமுக செயலாளர் பா. சிவநேசன், பேரூராட்சி மன்ற தலைவர் சர்மிளா சிவனேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் க. தனித்தமிழ் மாறன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூர் திமுக நிர்வாகிகள், பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.