எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

பூம்புகார் அருகே போலீசார் வாகன சோதனையின் போது புஷ்பா படம் வானியில் சரக்கு வாகனத்தில் தனி அறை அமைத்து காரைக்காலில் இருந்து கடத்திவரப்பட்ட 400 மது பாட்டில்கள் 110 லிட்டர் பாண்டி சாராயம் பறிமுதல். இருவர் கைது இருவர் தலை மறைவு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகார் மருதம்பள்ளம் பகுதியில் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசார் மற்றும் சீர்காழி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியே அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய முயன்ற போது வாகனத்தில் வந்த ஒருவர் குதித்து தப்பி ஓடினார்.

தொடர்ந்து வாகனத்தை ஒட்டி வந்த செந்தமிழ்ச்செல்வன் மற்றும் உடன் இருந்த ஜெகன்வளவன் ஆகிய இருவரை பிடித்து விசாரித்த போது சரக்கு வாகனத்தில் எஞ்சின் பகுதியிலும் புஷ்பா பட பாணியில் வாகனத்தின் கீழே தனி அறை அமைத்தும் காரைக்காலில் இருந்து சாராயம் மற்றும் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் 400 மது பாட்டில்கள், 110 லிட்டர் பாண்டி சாராயம் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையயில் தப்பி ஓடியது தருமபுரம் பகுதியைச் சேர்ந்த அகோரம் என்பதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் அகோரத்தின் மனைவி சத்யாவிற்கு சொந்தமானது என்பதும் தெரிய வந்தது.பின்னர் கடத்தலில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர் செந்தமிழ்ச்செல்வன்,உடனிருந்த ஜெகன்வளவன் ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் முன்லைப்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் தப்பியோடி தலை மறைவான அகோரம் மற்றும் அவரது மனைவி சத்யாவை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *