ராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேட்டில் உள்ள பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் நினைவுக் கல்லூரியில் போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது NSS PO முனைவர் R.மேரிசுஜின் வரவேற்புரையாற்றினார்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் கோ.தர்மர் போதையில்லா தமிழகத்தின் முக்கியத்துவம் பற்றியும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானால் ஏற்படும் பின் விளைவுகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர் கமுதி காவல் ஆய்வாளர் N.தெய்வீகபாண்டியன் போதையில்லா தமிழகம் பற்றி எடுத்துரைத்து மாணவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் அணுகுமுறையை விளக்கி கூறினார், கமுதி காவல் உதவி ஆய்வாளர் கொளதம் கலந்துகொண்டார்.
அதனை தொடர்ந்து கல்லூரியின் வணிகவியல் துறை தலைவர் முனைவர் K.ஆதிமூலம் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க
மாணவ மாணவிகள் அதனை பின்தொடர்ந்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்
நிறைவாக NSS PO பேரா.P.மாமல்லன் நன்றி கூறினார்.
அதனைத் தொடர்ந்து மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி கல்லூரியில் இருந்து கோட்டைமேடு உயர்நிலை பள்ளி வரை பேரணியாக சென்று பொது மக்கள் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதற்கான ஏற்பாட்டினை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் பூ.கஜேந்திரநாயகம் மற்றும் கல்லூரியின் போதை ஒழிப்பு குழு ஒருங்கிணைப்பாளர் முனைவர். அ. முகம்மது அசாரூதீன் ஆகியோர் ஏற்பாடு செய்தனர்
இந்நிகழ்வில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.