அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூரில் நடந்தது தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
அரியலூர் தாலுகா அலுவலகம் முன்பு நடந்தது மாவட்ட துணைத்தலைவர் பாக்கியம் விக்டோரியா தலைமை தாங்கினார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம் கே ஷேக் தாவூத் கண்டன உரையாற்றினார்
ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் மாவட்ட செயலாளர் மகாலிங்கம் போராட்டத்தின் நோக்கம் குறித்து பேசி நிறைவு உரையாற்றினார் இதனை தொடர்ந்து அதே இடத்தில் வருவாய் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ரமேஷ் அனைவரையும் வரவேற்று பேசினார் சங்கத்தின் தலைவர் பாக்கியம் விக்டோரியா தலைமை தாங்கினார் போராட்டத்தின் நோக்கம் குறித்து மாவட்ட செயலாளர் ஷேக்தாவூத் காந்தி மாவட்டத் துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்
அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சிவதாஸ் சரவணன் ரமேஷ் சிபி சக்கரவர்த்தி உட்பட ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்தும் போராடுகின்ற தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர் சங்கதின் மாநில நிர்வாகிகளை அழைத்து பேசிட வேண்டுமென தமிழக அரசை வலியுரித்தியும் இந்த கண்டன ஆர்பாட்டம் நடந்தது