எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடற்கரைக்கு பொன்னேரியைச் சேர்ந்தவர் ஜாபர் அலி, 16, இவர் கவரப் பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படித்தார்.
நேற்று மாலை, உடன் படிக்கும் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து,ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள, கடலில் குளித்து விளையாடி கொண்டிருந்த போது, திடீரென தோன்றிய ராட்சத அலையில் சிக்கி, ஜாபர் அலி மாயமானார். இதை பார்த்துக் கொண்டிருந்த மீனவர்கள், உடனடியாக பைபர் படகினை எடுத்துக் கொண்டு, மாணவரை மீட்க சென்றனர்.
பின், கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவரை, மீட்டு கரை சேர்த்தனர். இருப்பினும், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த, எண்ணுார் போலீசார் இறந்த, பள்ளி மாணவரான ஜாபர் அலியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
தந்தை இல்லை என்றும் தாயின் பராமரிப்பில் வளர்ந்து வரும் பள்ளி மாணவன் உயிரிழந்தது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது