நோயிலிருந்து விடுதலை இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் “வருமுன் காக்கும் மருத்துவ மையம்” துவக்கம் மற்றும் செயலி அறிமுகம்
இந்தியாவின் 79வது விடுதலை நாளை முன்னிட்டு, இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் அரசூரில் தனது வருமுன் காக்கும் மருத்துவ மையத்தை தொடங்கி, மக்கள் நோயிலிருந்து விடுதலை பெறும் ஒரு புதிய வழியை உருவாக்கியுள்ளது.
இதனுடன், Indo States Health App என்ற புதிய டிஜிட்டல் செயலியும் அறிமுகமாகிறது. இது ஆப்பிள் ஆப் ஸ்டோர் மற்றும் கூகிள் பிளே ஸ்டோரில் கிடைக்கக்கூடிய பாதுகாப்பான செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவு செயலி ஆகும். இந்த செயலி மருத்துவ ஆலோசனைகள், நேரம் பதிவு, பரிசோதனை முடிவுகள் மற்றும் நினைவூட்டல்களை ஒரே இடத்தில் வழங்குகிறது.
துவக்கவிழாவில் இதுகுறித்து உரையாற்றிய இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் மருத்துவ மையத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி, “இந்த விடுதலை நாளில், மக்கள் உடல்நல விடுதலையை உணர வேண்டும் — விழிப்புணர்வு, தொழில்நுட்பம் மற்றும் முன்கூட்டியே நோய் கண்டறிதல் என்பது ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழி,” என்று கூறினார்.
வருமுன் காக்கும் மருத்துவம், நோய்கள் உருவாகும் முன்பே அவற்றை கண்டறிந்து தடுக்கிறது. இதனால் குறைந்த செலவில், உயர்தரமான நிம்மதியான வாழ்க்கையை நம்மால் பெற முடிகிறது.
வரும் முன் காக்கும் மருத்துவ வசதிகள் அனைத்தையும் இண்டோஸ்டேட்ஸ் ஹெல்த் ஒரே கூரையின் கீழ் அளிக்கிறது. அவை வருமாறு:
128-slice CT மற்றும் 1.5 Tesla MRI, 3D மேமோகிராஃபி மற்றும் DEXA ஸ்கேன்,
முழுமையான ரத்தம் மற்றும் உடல் பரிசோதனைகள், இந்திய மற்றும் அமெரிக்க சான்றளிக்கப்பட்ட நிபுணர்கள்
இந்த மருத்துவ மையத்தில் அளிக்கப்படும் சேவைகள் விவரம் வருமாறு: வருமுன் காக்கும் ஆலோசனைகள், முழுமையான உடல்நிலை பரிசோதனை, தனிப்பட்ட பரிசோதனை திட்டங்கள் மற்றும் வாழ்க்கைமுறை ஆலோசனை, இதய நோய் ஆபத்துச் சரிபார்ப்பு, கரோனரி CT கால்சியம் ஸ்கோரிங், CT ஆஞ்சியோகிராம், ABI பரிசோதனை, வளர்சிதை மாற்றம் மற்றும் இதய நோய்களுக்கான இரத்தப் பரிசோதனைகள், பக்கவாதம் தொடர்பான எம்ஆர் ஆஞ்சியோகிராம் மற்றும் இரத்தப் பரிசோதனைகள், புற்றுநோய் ஆரம்பக் கட்ட பரிசோதனைகள் – டிஜிட்டல் மேமோகிராஃபி, மார்பக புற்றுநோய் குறைந்த அளவு கதிர்வீச்சு மார்பக CT – நுரையீரல் புற்றுநோய், CT கொலோனோகிராபி – குடல் புற்றுநோய், பாப் ஸ்மியர் – கருப்பை வாய் புற்றுநோய், MRI – மரபணு ஆபத்து உள்ளவர்களுக்கு புற்றுநோய் குறியீட்டு இரத்த சோதனைகள், DEXA ஸ்கேன் – எலும்புத் தளர்ச்சி பரிசோதனை, நினைவாற்றல், மன அழுத்தம், கவலை மற்றும் தற்கொலை ஆபத்து மதிப்பீடு முதலான மனநலம் சார்ந்த பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள்
முன்னதாக கோவையின் சாதனை பெண்மணி திருமதி கமலாத்தாள் அவர்கள் இந்த மையத்தை திறந்து வைத்தார். திருமதி விஜயலட்சுமி அவர்கள் இண்டோஸ்டேட்ஸ் ஆரோக்கிய செயலியை துவக்கி வைத்தார். இண்டோஸ்டேட்ஸ் நிறுவனர்கள் டாக்டர் ராஜேஷ் ரங்கசாமி மற்றும் டாக்டர் நித்யா மோகன் அவர்களும் அரசூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திரு. கோவிந்தராஜ், டாக்டர் வாணி மோகன், டாக்டர் மோகன், முதன்மை மருத்துவ அதிகாரி டாக்டர் லோகேஷ், மையத்தின் மேலாளர் திரு. அய்யப்பன் ஆகியோர் துவக்க விழாவில் கலந்து கொண்டனர்.