கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள அனுப்பர்பாளையம் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் 79 வது சுதந்திர தின விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
பள்ளியில் 1990 ஆம் ஆண்டு முதல் 95 ஆம் ஆண்டு வரை படித்த முன்னால் மாணவர்கள் ஒருங்கிணைத்த விழாவில் பள்ளியின் தலைமையாசிரியை தலைமையில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்யப்பட்டது..
இதனை தொடர்ந்து விழாவின் ஒரு பகுதியாக முன்னால் மாணவர்களின் நிதி உதவியுடன் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பயன்பாட்டிற்கென ஸ்மார்ட் வகுப்பறை துவங்கப்பட்டது அகலமான தொடு திரை வசதியுடன் துவங்கப்பட்ட இதில்,கணிணிகள் மற்றும் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் தனியார் பள்ளிகளுக்கு நிகராக துவங்கப்பட்ட இந்த ஸ்மார்ட் வகுப்பறையை முன்னால் மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து திறந்து வைத்தனர்..
இதே போல பள்ளி மைதானத்தில் மாணவர்கள் கால்பந்து விளையாட ஏதுவாக வலையுடன் கூடிய புதிய கோல் போஸ்ட் அமைக்கப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டுக்கு துவங்கப்பட்டது..
இது குறித்து அனுப்பர்பாளையம் மாநகராட்சி பள்ளியில் பயின்ற முன்னால் மாணவர்கள் கூறுகையில்,தாங்கள் பயின்ற பள்ளியை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தி வருவதாக தெரிவித்தனர் நூலகம்,வகுப்பறைகள்,விளையாட்டு உபகரணங்கள் ,போன்ற வசதிகளை ஏற்படுத்திய நிலையில், இதன் தொடர்ச்சியாக ,தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கு நிகராக அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களும் அதே தரத்தில் கல்வியை பெற வேண்டும் எனும் நோக்கத்தில் ஸ்மார்ட் வகுப்பறை போன்ற வசதிகளை தாங்கள் பயின்ற பள்ளிக்கு செய்துள்ளதாக தெரிவித்தனர்…
விழாவின் ஒரு பகுதியாக பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்கள் அவர் தம் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்..