திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தொழவூர் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் 79- வது சுதந்திர தின விழா நடைபெற்றது.

விழாவில் கல்லூரி முதல்வரின் நேர்முக உதவியாளர் தமிழ்ச்செம்மல் இராம. வேல்முருகன் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். விழாவிற்கு வருகை தந்தவர்களை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சீதாராமன் வரவேற்றார்.

விழாவில் உடற்கல்வி இயக்குனர் அகஸ்டின் ஞானராஜ், கல்லூரி கண்காணிப்பாளர் ரம்யா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். அந்த மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில்கள், இனிப்புகள் ஆகியவை வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் இரங்கதுரை அனைவருக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *