திருவொற்றியூர் எட்டாவது வார்டு உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் பொதுமக்கள் பெண்கள் ஆர்வத்துடன் முகாமில் பங்கேற்பு.

திருவொற்றியூர் எட்டாவது வார்டு உட்பட்ட பெரியார் நகர் சீனிவாச பெருமாள் கோயில் தெரு ஒத்தவாடை காவிரி நகர் இரட்டைமலை சீனிவாசன் நகர் உள்ளிட்ட பகுதியிலிருந்து மகளிர் உரிமைத் தொகை கேட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்ட பெண்கள் மனுக்களைப் பெற்றுக் கொண்டு பரிசீலனை.

திருவொற்றியூர் பெரியார் நகரில் நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் 15 துறைகளின் 46 சேவைகளும் நகர்ப்புற பகுதிகளில் 13 துறைகளின் 43 சேவைகளும் வழங்கப்படுகிறது இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி திருவெற்றியூர் சென்னை மாநகராட்சி 1 வது மண்டலம் 8 வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயகுமாரி தலைமையில் உங்களுடன் ஸ்டான்லின் திட்டம் சிறப்பு முகாம் நடைப்பெற்றது

இந்த தமிழக அரசின் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்ட முகாமில் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக் கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடையும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது ஊனமுற்றோர் மற்றும் முதியோர்களுக்கு வீல் சேர் வசதி செய்யப்பட்டு அனைத்து துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பயனாளிகளின் மனுக்களை பெற்று அவர்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.

இந்த முகாமில் மாவட்ட கழக செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஒன்னாவது மண்டல குழு தலைவர் தி.மு. தனியரசு . கவுன்சிலர் விஜயகுமாரி மற்றும் மண்டல ஆணையர் பொறுப்பாளர் பாண்டியன். பாபு. திருவொற்றியூர் வட்டாட்சியர் சகாயராணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

மற்றும்திமுக நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முகாமை பார்வையிட்டு
பொது மக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து தேவையான உதவிகளை உடனடியாக செய்து கொடுக்க அதிகாரியிடம் அறிவுறுத்தினர் திருவெற்றியூர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றம் உள்ளிட்ட உடனடி தீர்வு காண சான்றிதழ்களை வழங்கினார்.

சிறப்பு முகாமில் கலைஞர் உரிமைத்தொகை , ஜாதி சான்றிதழ் , ஆதார் கார்டு ரேஷன் கார்டில் பெயர் நீக்குதல் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட சான்றிதழ்களை உடனடியாக பொதுமக்களுக்கு வழங்கினார்கள்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பெண்கள் உரிமைத் தொகை ரேஷன் கார்டு , ஆதார் கார்டு , ஜாதி சான்றிதழ் உடனடியாக வழங்கப்பட்டதால் மகிழ்ச்சி அடைந்த பெண்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *