செங்குன்றம் செய்தியாளர்
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அலுவலகத்தில் 79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாதவரம் மண்டல குழு தலைவர் நந்தகோபால் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார் .

இதில் பள்ளி மாணவ, மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்துப் பாடி உறுதிமொழி ஏற்றனர் . சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அலுவலக அதிகாரி கணேசன்
செயற்பொறியாளர்கள் ஆனந்தராவ், முத்தமிழ் உதவி செயற்பொறியாளர்கள் சரவணமூர்த்தி, பாஸ்கர், நாகலட்சுமி, லோகேஷ் உட்பட அனைத்து துறைகளை சார்ந்த அதிகாரிகள், அலுவலகஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.