திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அண்ணா நகர் உழவர சந்தை திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழகம் மற்றும் திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை நடைபாதை நடைப்பயிற்சியாளர்கள் அமைப்பு சார்பில் இந்திய சுதந்திர தின விழாவில் கிராமப்புற பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயிகள் வேளாண் வணிகர்ளுக்கு பாராட்டு விழா உழவர் சந்தை வளாகத்தில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக தலைவர் சேவியர் சார்லஸ் தலைமை வகித்தார் வேளாண் வணிக துணை இயக்குனர் சொர்ண பாரதி வழிகாட்டலில் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் ரோஷன் ஷர்மிளா, உதவி நிர்வாக அலுவலர் கார்த்திகா, லோகராணி, திருச்சி நீதிமன்றம் எம்ஜிஆர் சிலை நடைபாதை நடை பயிற்சியாளர்கள் அமைப்பு தலைவர் சீனிவாசன் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 19வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாதிக் பாட்ஷா, 28 வது வார்டு மாமன்ற உறுப்பினர் பைஸ் அகமது, ஸ்ரீரங்கம் நகர நல சங்க தலைவர் சுரேஷ் திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திருச்சிராப்பள்ளி நாணயவியல் கழக செயலர் பத்ரிநாராயணன் ஒருங்கிணைப்பில் திருச்சிராப்பள்ளி ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் செயலர் சரவணன், சக்தி சங்கர் தலைவி சுபத்ரா தியாகராஜன், ஆயிரவைசிய மகாஜன சபை தலைவர் குமரன், பத்மகிருஷ்ணன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் உள்ளிட்டோர்,
உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை, இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்து வருவதையும், இந்த சந்தைகள் மூலம், விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலை பெறுவதோடு, நுகர்வோர்களுக்கும் நியாயமான விலையில் தரமான பொருட்களை தருவதைப் பாராட்டி பொன்னாடை அணிவித்து சிறப்பித்தனர்.
உழவர் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் பெரும்பாலும் புதிதாக விளைவிக்கப்பட்டவை என்பதால், அவை தரமானதாக இருக்கும், என்று தமிழ்நாடு அரசின் வேளாண்மை விற்பனை வாரியம் தெரிவித்துள்ளது. கிராமப்புற பொருளாதார வளர்ச்சி:உழவர் சந்தைகள் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த உதவுகின்றன. உழவர் சந்தைகள் சுகாதாரமான முறையில் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் அடிக்கடி தூய்மைப்படுத்தப்படுகின்றன.
வேளாண் விற்பனை மற்றும் வணிகம் என்பது, விவசாயிகள் விளைவித்த பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் குறிக்கிறது.
இதில், விளைபொருட்களை சேகரித்தல், தரம்பிரித்தல், விற்பனை செய்தல் மற்றும் நுகர்வோருக்கு வழங்குதல் ஆகியவை அடங்கும். தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம், உழவர் சந்தைகள் உட்பட பல்வேறு வேளாண் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளை சமூக செயற்பாட்டாளர்கள் பாராட்டினார்கள்.
திருச்சிராப்பள்ளி ஜூவல்லர்ஸ் அசோசியேஷன், சக்தி சங்கம், சிவசக்தி அகாடமி, ரோட்டரி கிளப் ஆப் திருச்சி மிட் டவுன், வாசவி கிளப் வனிதா ராக்போர்ட் திருச்சி, திருச்சிராப்பள்ளி ஆயிரம் வைசிய மஞ்சப்புத்தூர் மகா ஜனசபை, திருச்சிராப்பள்ளி ஆயிர வைசிய பேரி செட்டியார் சமூகத்தினர்,
திருச்சி ஜில்லா நாயுடு மகாஜன சங்கம், ஸ்ரீ ராதாகிருஷ்ண மகளிர் மன்ற நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்