செங்குன்றம் செய்தியாளர்
மாதவரம் ரவுண்டானா லாரி டிரக் நிறுத்தத்தில் பன்னாட்டு அரிமா சங்கத்தின் சார்பில் 79 ஆவது சுதந்திர தின விழா கொடியேற்று விழாவை முன்னிட்டு சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டல அலுவலர் கணேசன் தேசியக் கொடியை ஏற்றி இனிப்புகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் சிஎம்டிஏ லாரி நிறுத்த சங்கத்தின் தலைவர் ஜெயக்குமார் ,செயலாளர் தக்ஷிணாமூர்த்தி ,மனோகரன், லயன் மணி சேகர் ,மாதவரம் லயன் ராஜேஸ்வரி , இந்திரா, ஜெயராணி உட்பட பலர் கலந்து கொண்டு சுதந்திர தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
முன்னதாக திருநங்கையினரின் ஆடல் பாடல்களோடு ஆரம்பிக்கப்பட்ட இந்த விழாவில் , தலைவர் ஜெயக்குமார் சுதந்திர தின விளக்க உரையை பொதுமக்களிடத்தில் பேசினார் இதில் லாரி ஓட்டுநர்கள் ,துப்புரவு தொழிலாளர்கள் ,விளையாட்டில் ஈடுபட்ட மாணவர்கள் ,காது கேளாதோர் மற்றும் ஊனமுற்றோர் உட்பட நலிவுற்ற தொழிலாளர்கள் அனைவருக்கும் காசோலை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் நலிவுற்ற தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி செலவுக்காக காசோலை வழங்கப்பட்டது. ஏராளமான பல மாநிலங்களை சேர்ந்த ஓட்டுநர்கள், கிளீனர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வு மாதவரம் டிரக் டெர்மினல் அசோசியேசன் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அனைத்து சங்கங்களின் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.