திருச்சி மாவட்டம் துறையூர் நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் 79ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் உதவி கோட்ட பொறியாளர் நல்லதம்பி ஆலோசனையின் பேரில் உதவி பொறியாளர்கள் சோலை முருகன்,ஹரிஷ் கண்ணன் தலைமையில் தேசிய கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் அலுவலக மேலாளர் அகஸ்டின், ஜே டி ஓ இந்திரா தேவி, சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், சாலை ஆய்வாளர்கள் சுரேஷ், அன்பழகன், விசுவாசம் மற்றும் அலுவலக ஊழியர்கள்,சாலை பணியாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்